புதரில் சிக்கிய குட்கா; 2 பேர் கைது
ஈரோடு:ஈரோட்டில் புதரில் குட்கா பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, வைராபாளையம் வாய்க்கால் கரை பகுதியில் நேற்று மதியம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்குள்ள புதரில் சாக்கு மூட்டை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை வெளியே எடுத்து சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 40 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது. இது தொடர்பாக ஈரோடு திருநகர் காலனி சரவணன் மகன் கிருபாகரன், 19; ராமநாதபுரம் கீழக்கரை நாகராஜ் மகன் யுவன் ராஜா, 27, ஆகியோரை கைது செய்தனர். யுவன்ராஜா திருமணம் ஆனவர். கிருபாகரனுக்கு ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவுள்ளது.இந்நிலையில் தான் குட்கா விவகாரத்தில் கைதாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.