கைத்தறி கண்காட்சி விற்பனை துவக்கம்
ஈரோடு:தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், கைத்தறி கண்காட்சி விற்பனை துவங்கியது. கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார். கண்காட்சியில் கைத்தறி ஆடைகள், துணிகள், பெட்ஷீட், துண்டு, பிற விரிப்பு, கைத்தறி காட்டன் புடவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய கண்காட்சி, விற்பனை இன்றும் நடக்கிறது. நிகழ்வில் மூத்த நெசவாளர்கள் கவுரவிக்கப்பட்டு, 28.95 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. ஈரோடு சரக கைத்தறி உதவி இயக்குனர் வெங்கடேசலு, உதவி அமலாக்க அதிகாரி நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.