காவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்
ஈரோடு :தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் உள்ளிட்ட 3,665 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நவ.9ல் நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும், 21ம் தேதி கடைசி நாள். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக, ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. காலை, 9:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, 96552-20100 என்ற எண்ணில் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். உதவி மையம், 21ம் தேதி வரை செயல்படும்.