உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தார்ச்சாலை - பஸ் வசதி வேண்டி மலைப்பகுதி மக்கள் முறையீடு

தார்ச்சாலை - பஸ் வசதி வேண்டி மலைப்பகுதி மக்கள் முறையீடு

ஈரோடு, கடம்பூர் மலை, டி.ஜி.புதுாரில் வசிக்கும், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:குத்தியாலத்துார் பஞ்., உகினியம் கிராமத்தில், 125க்கும் மேற்பட்ட ஊராளி பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இக்கிராமம் வன செட்டில்மென்ட் கிராமம். இக்கிராமத்தில் இருந்து, 4 கி.மீ., துாரத்தில் கரளயம் கிராமம் உள்ளது. இக்கிராம மக்கள் தங்கள் கல்வி, மருத்துவம் என அனைத்துக்கும், கரளயம் செல்ல வேண்டும்.ஆனால் கரளயம் செல்ல தார்சாலையை அடைய, அடர்ந்த வனப்பகுதி, ஆபத்தான பகுதியை கடந்து, 4 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டும். இந்த இணைப்பு சாலை தார்ச்சாலையாக இருந்தது. தற்போது சேதமாகி டூவீலர்கள் கூட செல்ல முடியாதபடி உள்ளது. எனவே உகினியம் - கரளயம் செல்லும், 4 கி.மீ., வனச்சாலையை புதுப்பித்து, கரளயம் வழியாக செல்லும் அரசு பஸ்களை உகினியம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை