இந்து ஆட்டோ முன்னணி சங்க மாவட்ட கூட்டம்
ஈரோடு, இந்து ஆட்டோ முன்னணி சங்கத்தின் மாவட்ட கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்து முன்னணி மாநில செயலர் கிஷோர்குமார் சிறப்புரையாற்றினார். ஆட்டோ ஓட்டுனர்களின் நலன் காக்க கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும். டிச.,4க்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களையும் சந்திப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.