உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புனித அமல அன்னை ஆலய தேர் திருவிழா

புனித அமல அன்னை ஆலய தேர் திருவிழா

ஈரோடு: ஈரோடு புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக காலையில் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர திருப்பலி நடந்தது. பின்னர் கோவிலை சுற்றி மாதாவின் வேண்டுதல் தேர் எடுக்கப்பட்டது. மாலையில் கோவை மறைவட்ட முதன்மை குரு ஸ்டீபன் ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலியை தொடர்ந்து மாதா தேர்பவனி நடந்தது அலங்கரிக்கப்பட்ட தேரில் அமல அன்னை சொரூபம் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடியபடி பங்கேற்றனர். ஈரோடு மறை வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு ஆலயங்களின் பங்கு தந்தையர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஈரோடு புனித அமல அன்னை ஆலய பங்கு தந்தை ராயப்பன், உதவி பங்கு தந்தை லுார்து அமிர்தராஜ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ