மேலும் செய்திகள்
உணவு வீணாவதை கட்டுப்படுத்த புதிய சட்டம்
18-Oct-2024
உணவு பாதுகாப்பு அதிகாரி ஓட்டல்களில் திடீர் ஆய்வு
24-Oct-2024
விடுமுறையால் ஹோட்டல்கள் மூடல்வெளியூர்வாசிகள் உணவின்றி தவிப்புகரூர், நவ. 3-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஹோட்டல்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், வெளியூர்வாசிகள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.க.பரமத்தி ஒன்றிய பகுதியில் பெரிய மற்றும் சிறிய அளவிலான டீக்கடை, பேக்கரி, டிபன் கடைகள், ஹோட்டல், மெஸ்கள் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. வெளி மாநிலம் மற்றும் மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள், இங்கு பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.இவர்கள் இங்குள்ள உணவு விடுதிகளில், கணக்கு வைத்து உணவருந்தி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக சிறிய மற்றும் பெரிய ஹோட்டல் கடைகள் அனைத்தும், மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ளன.இதனால் வெளியூரில் இருந்து வந்த கிரஷர் வாகன ஓட்டுனர்கள், லோடு மேன்கள் போன்ற வேலைகளுக்காக இங்கு தங்கியுள்ளவர்கள், தீபாவளிக்கு ஊருக்கு செல்லாதவர்கள் உள்ளிட்டோர் உணவுக்காக பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். திறந்திருந்த ஒரு சில கடைகளிலும், உணவு பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தன. உணவுக்காக கடைகளை தேடி, நகரத்திற்கு சென்று திரும்புவதால் கூடுதல் செலவாகிறது என, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
18-Oct-2024
24-Oct-2024