சாலையோரம் வீசப்படும் வீட்டு உபயோக கழிவுகள்
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 18வது வார்டு மாணிக்கம்பாளைத்தில் இருந்து பெரியவலசுக்கு செல்லும் வழியில், பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக பொருட்களான மெத்தை, தலையணை, துணி, பிளாஸ்டிக் சாமான் உள்ளிட்ட கழிவு பொருள், சாலையோரம் கொட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு, கழிவை கொட்டும் நபர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கவும், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.