உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் ரூ.150 கோடியில் திட்டப்பணி வீட்டு வசதித்துறை அமைச்சர் தகவல்

ஈரோட்டில் ரூ.150 கோடியில் திட்டப்பணி வீட்டு வசதித்துறை அமைச்சர் தகவல்

ஈரோடு, ''மாநகராட்சி வார்டுகளில், 150 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டப்பணி நடந்து வருகிறது,'' என்று, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.ஈரோடு மாநகராட்சி, 43வது வார்டு மரப்பாலம்ஜீவானந்தம் சாலையில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை, அமைச்சர் முத்துசாமி நேற்று பூஜை செய்து துவக்கி வைத்தார். இதையடுத்து நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டு வார்டுகளில் இன்று (நேற்று) சாலை, சாக்கடை வசதி என, 91 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில், 60 வார்டுகளுக்கும், 150 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்ட பணிகளை துவங்க அரசாணை வழங்கப்பட்டு, பெரும்பாலான பணி துவங்கி நடந்து வருகிறது. சோலார் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி முடியும் நிலையில் உள்ளது. அங்கு காய்கறி மார்க்கெட் கட்டுமான பணியும் வேகமாக நடந்து வருகிறது. மரப்பாலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, நீர்வழி புறம்போக்கு இடமாக தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்வழி புறம்போக்கில் கட்டடம் கட்ட நீதிமன்ற தடை உள்ளது. இதன் காரணமாகத்தான் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து புதியதாக கட்ட முடியவில்லை. வேறிடத்துக்கு செல்லவும் குடியிருப்புவாசிகள் தயாராக இல்லை.இவ்வாறு அமைச்சர் கூறினார்.வாக்குவாதம்மாநகராட்சி, 45வது வார்டு பெரியார் நகர், 80 அடி சாலை பகுதியில், பல்வேறு பணிகளை துவக்கி வைக்க அமைச்சர் முத்துசாமி வந்தார். அவருடன் வந்த நிர்வாகிகள், அதிகாரிகள் என பலரின் கார் சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அப்போது டூவீலரில் வந்த ஒருவர், மாநகர செயலாளர் சுப்ரமணியத்தின் டிரைவரிடம், வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு கூறினார். அதற்கு டிரைவர் ஒருமையில் பேசியதால், டூவீலரில் வந்தவரும் வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வந்த ஒரு போலீஸ்காரர், டூவீலரில் வந்தவரை, அப்படியே சட்டையை பிடித்து இழுத்துச்சென்று அப்புறப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ