உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகை

நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகை

டி.என்.பாளையம், டி.என்.பாளையம், புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பங்களாபுதுார், அண்ணா நகர், புஞ்சை துறையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நுாறு நாள் வேலை திட்டத்தில், 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இதில் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் வழங்குகின்றனர். மற்ற பகுதிகளுக்கு சரிவர வழங்குவதில்லை எனக்கூறி, 200க்கும் மேற்பட்டோர் புஞ்சை துறையம் பாளையம் பஞ்., அலுவலகத்தை நேற்று முற்றுகை இட்டனர். டி.என்.பாளையம் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தற்போது தினமும், 20 பேருக்கு மட்டுமே வேலை கொடுக்கும் சூழல் உள்ளது. மேலும் இனி மூன்று தொகுப்புகளாக பிரித்து தினமும் ஒரு தொகுப்புக்கு, 20 பேர் வீதம், 60 பேருக்கு தினமும் வேலை கொடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார். இதையடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை