உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகளுடன்,மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

மகளுடன்,மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

கோபி, மகளுடன், மனைவி மாயமானதாக, கோபி போலீசில் தொழிலாளி புகாரளித்துள்ளார்.கோபி அருகே மாதேஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜய், 28. கூலித்தொழிலாளி; இவரின் மனைவி முத்தம்மாள், 20, தனது ஆறு மாத பெண் குழந்தையுடன், சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி, கடந்த, 28ம் தேதி வெளியே சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விஜய் கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை