உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி, மகள் மாயம் போலீசில் கணவன் புகார்

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவன் புகார்

ஈரோடு, ஈரோடு, கிராமடை ஈஞ்சம்பள்ள கிராமம் சேகர் மகன் சக்திவேல், 23. வெல்டிங் ஒர்க்ஷாப் தொழிலாளி. இவரது மனைவி சந்தியா, 23. இவர்களுக்கு, 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 7ம் தேதி காலை 6:00 மணிக்கு வேலைக்கு சென்ற சக்திவேல், மாலை, 4:00 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு பூட்டி இருந்தது. பூட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில், 'நான் வீட்டை விட்டு வெளியே செல்கிறேன். நீ குடி பழக்கத்தை விட்டு திருந்தினால் நான் நிச்சயமாக திரும்பி வருவேன்' என எழுதி இருந்தது. மனைவி, மகள் குறித்து அக்கம் பக்கம், நண்பர்கள், உறவினர்களிடம் விசாரித்தார். தகவல் இல்லாததால் கடிதத்துடன், மலையம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !