உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தநாள் ஞாபகம் வந்ததே; நண்பனே...நண்பனே

அந்தநாள் ஞாபகம் வந்ததே; நண்பனே...நண்பனே

அந்தநாள் ஞாபகம் வந்ததே; நண்பனே...நண்பனே' வெள்ளகோவில், நவ. 12-வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில், 1995 முதல் 1997 வரை, பிளஸ்௨வில் தொழிற்கல்வி பிரிவில் படித்த மாணவ, மாணவியர் பள்ளியில் சந்தித்து கொண்டனர். பள்ளியில் சந்தித்து கொண்ட அனைவரும், பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர். சந்திப்பின் நினைவு பொக்கிஷமாக, குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். பள்ளி வளாகத்தை பழைய நினைவுகளோடு சுற்றி பார்த்தனர். நிகழ்வில் பங்கேற்ற மூன்று பேரை அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்து பரிசு வழங்கினர். தங்களுடன் பயின்று இறந்து போன செந்திலுக்கு அஞ்சலி செலுத்தினர். சந்திப்பு ஏற்பாடுகளை வழக்கறிஞர் ஷாஜகான், பாப்பம்பாளையம் அன்பழகன், கணேசன் உள்ளிட்டோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ