விசைத்தறியில் கைத்தறி ரகம் தயாரித்தால் நடவடிக்கை பாயும்
ஈரோடு: ஈரோடு, கைத்தறி அமலாக்க பிரிவு உதவி அமலாக்க அதிகாரி நாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:கைத்தறிக்கு என 'பேட்டு பார்டர் டிசைனில்' பருத்தி மற்றும் பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்ஷீட், டிரஸ் மெட்டீ-ரியல், ஜமக்காளம் என, 11 ரகம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரகங்-களை விசைத்தறியில் உற்பத்தி செய்வது, கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து அமலாக்க ஆய்வுக்குழு மூலம் தினமும் ஆய்வு செய்யப்படுகிறது. இதில் தவறு கண்டறியப்பட்டால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்கள் குறித்த விபரம் தேவையெனில், ஈரோடு அமலாக்க பிரிவு அலுவ-லகத்தை அணுகலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.