உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 225 பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம் பஞ்.,களை பிற உள்ளாட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு

225 பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம் பஞ்.,களை பிற உள்ளாட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு

225 பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம்பஞ்.,களை பிற உள்ளாட்சிகளுடன் இணைக்க எதிர்ப்புஈரோடு, அக். 3-ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 225 பஞ்சாயத்துகளிலும் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது.பவானி யூனியன், ஓடத்துறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பஞ்., தலைவர் பாலமுருகன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட வரவு-செலவு கணக்குகள், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மக்கள் எடுத்துரைக்க வேண்டும். இளம் வயது திருமணம், இளம் வயது கர்ப்பம், ஊட்டச்சத்து குறைபாடு, வேளாண் துணை திட்டங்கள், மண்ணுயிர் காப்போம், டெங்கு விழிப்புணர்வு என அனைத்து இனங்களிலும் பொதுமக்களுக்கு விளக்கம் தரப்படும்.கொசு உற்பத்தியை தடுக்க சிமென்ட் தொட்டி, குடிநீர் தேக்கும் பொருட்கள், கீழ் நிலை, மேல்நிலை தொட்டிகளை வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர், சாம்பல் கொண்டு சுத்தம் செய்த பின், நீரை பிடிக்க வேண்டும். குழந்தை திருமணங்கள் குறித்து தகவல் அறிந்தால், 1098 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம்.இவ்வாறு பேசினார்.பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) உமாசங்கர், வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கோதை உட்பட பலர் பங்கேற்றனர்.ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துக்களில் நடந்த கிராமசபை கூட்டத்தில், பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.கோபி நகராட்சியை ஒட்டிய பகுதியில் உள்ள குள்ளம்பாளையம், பா.வெள்ளாளபாளையம், மொடச்சூர், பாரியூர், லக்கம்பட்டி போன்ற பஞ்சாயத்தில், 'இப்பஞ்சாயத்துக்களை கோபி நகராட்சியுடன் இணைக்கக்கூடாது. அவ்வாறு இணைத்தால் அனைத்து வரி இனங்களும் உயரும். 100 நாள் வேலை திட்டம் போன்ற பல திட்டங்கள் பறி போகும்,' எனக்கூறி, தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி