உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கட்டடம் திறப்பு

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கட்டடம் திறப்பு

பால் உற்பத்தியாளர்கள்கூட்டுறவு கட்டடம் திறப்புஈரோடு, நவ. 7-கவுந்தப்பாடி அருகே, பூமாண்டகவுண்டனுாரில் திருப்பூர் எம்.பி., சுப்பராயன் தொகுதி வளர்ச்சி நிதி, 13.50 லட்சம் ரூபாயில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க புதிய கட்டடம் கட்டப்பட்டது.இதற்கான திறப்பு விழா, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் தலைமையில் நடந்தது. வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் நல்லசிவம், ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டவுன் பஞ்., முன்னாள் கவுன்சிலர் சென்னிமலை வரவேற்றார். திருப்பூர் எம்.பி., சுப்பராயன், கட்டடத்தை திறந்து வைத்தார். மேட்டுப்பாளையம் டவுன் பஞ்., தலைவர் தனலட்சுமி குமாரசாமி, தமயந்தி, விசாலாட்சி, ஆவின் துணை பொது மேலாளர் வேலுசாமி உட்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் சென்னியப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ