உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை திறப்பு

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை திறப்பு

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை திறப்புபுன்செய்புளியம்பட்டி, செப். 28-சத்தி அருகே இக்கரை தத்தபள்ளியில், தென் கயிலை பர்வதம் அறக்கட்டளையின் கீழ், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள சத்திய ஞான சபை திறப்பு விழா மற்றும் தினமும் அன்னதானம் வழங்கும் வகையில் தரும சாலை திறப்பு விழா நேற்று நடந்தது.அறக்கட்டளை நிறுவனர் வெங்கடேசன் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைவர் புஷ்பம் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் பாலசுப்பிரமணியம், ஞானசபை கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி வழிபட்டார்.இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கும் தருமசாலையை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் வைஷ்ணவி வெங்கடேசன், கோமதி சீனிவாசன், வாசவி தங்க மாளிகை பிரபுகாந்த், மகா மந்திராலயம் குழந்தைவேல், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் குப்புராஜ், வழக்கறிஞர் அஜித்குமார், பூ மார்க்கெட் நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை