அதிகரிக்கும் குடிபோதை வாகன இயக்க வழக்கு
ஈரோடு:ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், மாநகரின் பல்வேறு பகுதிகளில், வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர். இதில் குறிப்பாக, குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து சிக்குவது அதிகரித்துள்ளது. போலீசார் கடந்த நான்கு மாதங்களில், குடிபோதையில் வாகனம் இயக்கியதாக, 222 வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், 130 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய, ஆர்.டி.ஓ.,க்களுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.அதேசமயம் ஒட்டு மொத்தமாக நான்கு மாதத்தில், விதிமீறல் தொடர்பாக, 4,123 வழக்கு பதிவு செய்து, 21.25 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.