காலவரையற்ற வேலை நிறுத்தம் ஜாக்டோஜியோ ஆயத்த கூட்டம்
ஈரோடு: ஜாக்டோ ஜியோ சார்பில் ஜன.,6 முதல் நடக்க உள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் குறித்த ஆயத்த கூட்டம் ஈரோட்டில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் விஜயமனோகரன், சரவணன், வீராகார்த்திக், மதியழகன், ஆறுமுகம், மாதேஸ்வரன் தலைமை வகித்தனர். கோரிக்கை குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு பேசினார்.கடந்த, 2003 ஏப்., 1க்கு பின் அரசு பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு பணியினருக்குள் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும், 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றினர்.