உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இந்திய ராணுவத்துக்கு 2வது நாளாக ஆள்சேர்ப்பு முகாம்

இந்திய ராணுவத்துக்கு 2வது நாளாக ஆள்சேர்ப்பு முகாம்

ஈரோடு, ஈரோட்டில், இந்திய ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம், இரண்டாவது நாளாக நேற்று நடந்தது.இந்திய ராணுவத்துக்கு அக்னிவீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்க்,-ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் ஆகிய பணியிடங்களுக்கு ஈரோடு வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் ஆள் சேர்ப்பு முகாம் கடந்த, 26ல் துவங்கியது. ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்திருந்தனர். முதல் நாள் முகாமில் தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர்.நேற்று அதிகாலை 3:00 மணியளவில் இரண்டாவது நாளாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வ.உ.சி மைதானத்தில் முகாம் துவங்கியது. உடம்பில் டாட்டூஸ் (பச்சை) குத்தியவர்களை போட்டியில் பங்கேற்க அனுமதி இல்லை என வெளியேற்றினர். சென்னை மண்டல துணை இயக்குனர் அஸ்வதி, ஆள்சேர்ப்பு இயக்குனர்கள் அன்சுல் வர்மா, சுனில் யாதவ், ராஜட் ஸ்வர்ணா முன்னிலையில் நடந்தது. முன்னதாக தேர்வர்கள் வரவழைக்கப்பட்டு மைதானத்தில், 400 மீட்டர் கொண்ட ஓடு தளத்தில் 4 ரவுண்ட் (1,600 மீட்டர்) ஓட வைத்தனர். சிலர் ஓட முடியாமல் 2வது, 3வது ரவுண்டிலேயே விலகினர். 4 ரவுண்ட் ஓடி குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்தவர்களுக்கு உடல் திறனறிதல் தேர்வு, தகுதி தேர்வும் நடந்தது. நீளம் தாண்டுதல், புல்- அப்ஸ் தேர்வு நடத்தப்பட்டது. உயரம், கால்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆவணங்கள் மற்றும் சான்றிதழ், கையெழுத்து சரிபார்ப்பு நடந்தது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும், 29, 30ல் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு செப்.,5ல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை