36 நிறுவனங்கள் மீது தொ.துறை நடவடிக்கை
ஈரோடு, தொழிலாளர் துறை அதிகாரிகள் கடந்த மாதம் நடத்திய ஆய்வில், 36 நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது.ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் துணை ஆய்வர்கள், உதவி ஆய்வர்கள் கடந்த செப்., மாதம் மாவட்ட அளவில் ஆய்வு செய்தனர்.சட்டமுறை எடையளவு சட்டப்படி, கடைகள், நிறுவனங்களில் விதி மீறல் குறித்து, 84 இடங்களில் நடந்த ஆய்வில், 30 கடைகளிலும், அதிகபட்ச சில்லறை விற்பனை நிலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது குறித்து, 35 கடைகள், நிறுவனங்களில் நடந்த ஆய்வில், 2 கடைகளிலும் முரண்பாடு கண்டறியப்பட்டது.தொழிலாளர் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக, 37 நிறுவனங்களில் நடந்த ஆய்வில், 4 இடங்களில் முரண்பாடு அறியப்பட்டது. முரண்பாடுகள் கண்டறியப்பட்ட, 36 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.