உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓட்டு எண்ணும் மையத்தில் ஆய்வு

ஓட்டு எண்ணும் மையத்தில் ஆய்வு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, சித்தோடு அருகே உள்ள அரசினர் பொறியியல் கல்லுாரியில் (ஐ.ஆர்.டி.டி.,), பிப்., ௮ம் தேதி நடக்கவுள்ளது. இதனால் கல்லுா-ரியில், ஓட்டு எண்ணிக்கைக்கான பணிகள் தொடங்கியுள்ளது.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் 'ஸ்ட்ராங் ரூம்' மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும் அறை-களில் முன்னேற்பாடு பணி தீவிரமாக நடக்கிறது.இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான ஸ்ரீகாந்த் நேற்று ஆய்வு செய்தார். இயந்தி-ரங்கள் வைக்கும் அறை, ஓட்டு எண்ணும் மையத்துக்கு இயந்தி-ரங்கள் எடுத்து வரும் பாதை, எண்ணும் இடத்தில் கட்டைகள் கட்டி, அடுத்து கம்பி வலைகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதை ஆய்வு செய்தார்.ஓட்டு எண்ணும் பகுதிக்குள் வரும் வழி, வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் ஓட்டு எண்ணிக்கையை கவனிக்க அமரும் இடங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளையும் பார்வை-யிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி