மேலும் செய்திகள்
கழிப்பறையை சீரமைக்க வெள்ளகுளத்தினர் வலியுறுத்தல்
13-Jun-2025
தாராபுரம், தாராபுரத்தில், புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை வளாகத்தில் இருந்த தடுப்புகள், திடீரென சாய்ந்து விழுந்தன.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சூளைமேடு பகுதியில், 36 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது. குடிநீர் வசதி இல்லாததால், இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில், கழிப்பறை முன் இருந்த ஸ்டீல் தடுப்பு, நேற்று காலை சாய்ந்து கிடந்தது. தகவலறிந்து, அங்கு வந்த நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன், நகராட்சி பொறியாளர் சுகந்தி உள்ளிட்ட அதிகாரிகள், அங்கிருந்த மக்களிடம் சேதத்தை பார்வையிட்டு, மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றனர்.
13-Jun-2025