நடத்தை விதிமீறல் வழக்கை அதிகரிக்க அறிவுறுத்தல்
ஈரோடு, தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு கடந்த, 15ல் வெளியானது. உடனடியாக தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது.ஆனால் ஈரோடு மாவட்ட போலீசார், 23ம் தேதி காலை வரை நடத்தை விதி மீறல் தொடர்பாக இரு வழக்கு மட்டுமே பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில் தான், 23ம் தேதி தேர்தல் ஆலோசனை தொடர்பான கூட்டம் நடந்தது.மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக அதிகளவில் வழக்குகள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.இதை தொடர்ந்து, 23ம் தேதியே, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, அரசியல் கட்சியினர் மீது, நான்கு வழக்குகளை பதிவு செய்தனர். வரும் நாட்களில் நடத்தை விதிமீறல் வழக்குகளை, போலீசார் அதிக அளவில் பதிவு செய்வர் என எதிர்பார்க்கலாம்.