துாய்மை பணியாளர்களுக்கு காப்பீடு திட்ட அட்டை
தாராபுரம், ஆதி திராவிடர் நலத்துறை, தாட்கோ மூலம், தாராபுரம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, நல வாரிய அட்டை மற்றும் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் நிகழ்ச்சி, தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன், நகராட்சி ஆணையர் முஸ்தபா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.