மேலும் செய்திகள்
பணம் கட்டி சேவல் சண்டை நடத்திய ஐந்து பேர் கைது
13-Jun-2025
சென்னிமலை: சேவல் சண்டை விளையாட்டு, தமிழகத்தில் மட்டுமின்றி கர்-நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநி-லங்களிலும், கிராமப்புறங்களில் பண்டிகை காலங்களில் சிறப்-பாக நடக்கிறது. தமிழகத்தில் சேவல் சண்டை சூதாட்டமாக மாறியதால், அரசு தடை விதித்துள்ளது. அதேசமயம் மற்ற மாநி-லங்களில் நடந்து வருகிறது. சேவல் சண்டையில் தமிழக சேவல்-களுக்கு, பிற மாநிலங்களில் மவுசும், விற்பனை வாய்ப்பு, கிராக்கி நிலவுகிறது.இதனால் சண்டை கோழி வளர்ப்பு தொழில் சூடுபிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுற்றுவட்டார பகுதியில் மட்டும், சிறிது, பெரிதாக, 50க்கும் மேற்பட்ட சண்டை சேவல் பண்ணை உருவாகியுள்ளது. இதை பெரும்பாலும் இளைஞர்-களே தொடங்கியுள்ளனர். இதன் மூலம் நல்ல லாபமும் கிடைப்-பதாக கூறுகின்றனர்.கோழிகளில் காகம், மயில், வல்லுாறு, ஆந்தை, கீரி, மயில், செங்கருப்பு, கோழிக்கறிப்பு, ஜல்லிக்கருப்பு என பல்வேறு ரகம் உள்ளது. கேரள மாநில மக்கள் அழகுக்காக வீடுகளில் சேவல் வளர்க்க வாங்குகின்றனர். இதில் கிளிமூக்கு, கட்ட மூக்கு, விசிறி வால், மீட்டர் வால் ரக கோழிகள் அதிகம் விற்கிறது. இதுவும் ஒரு சேவல், 10 ஆயிரம் ரூபாய் தொடங்கி, 30 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. அதேபோல் சேவல் சண்டையானது, சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, கத்தி கால் சண்டை என ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதிகளோடு பல்வேறு பெயர்களில் நடத்தப்படுகின்றன. சண்டை சேவல் வளர்ப்பு, சவால் மிகுந்த வேலை தான் என்கிறார் சென்னிமலை, முருங்கத்தொழுவை சேர்ந்த சண்டை சேவல் வளர்ப்பாளர்சீனிவாசன்.இதுகுறித்து அவர் கூறியதாவது:பொதுவாகவே சேவல்களுக்கு சக சேவல்களை அடக்கி ஆள-வேண்டும் மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி குணம் இருக்கும். இதனால் அவற்றை சண்டையிட செய்வது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டமில்லை. சண்டை பயிற்சியோடு, நீச்சல் பயிற்சி, நடைபயிற்சி, உடற்பயிற்சிகளும் சேவல்களுக்கு கொடுக்கப்படுகிறது. சண்டை கோழி வளர்ப்பில் உணவு முக்கியம். வழக்கமான உணவை விட உடலை வலிமைப்படுத்தும் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி, அத்தி பழம் கொடுக்கப்படும். சண்டைக்கு நன்கு தயாராகிய சேவல்களை, ஒத்திகை பார்த்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். ஒரு கோழி, ௫,௦௦௦ ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை சண்டை திறனை பொறுத்து விலை போகிறது. சண்டை கோழி இறைச்சி ஒரு கிலோ, 1,200 வரை விலை போகிறது. இதனால் இறைச்சிக்-காவும் சண்டை சேவல் வளர்க்கப்படுகிறது. சேவல் சண்டையை போட்டியாக பார்க்காமல், பாரம்பரிய விளையாட்டாக பார்க்க வேண்டும். இந்த விளையாட்டு மன்னர் காலம் முதலே நடத்தப்-பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டைப்போல் சேவல் சண்டை அழி-யாமல் தடுப்பதும் நம் கடமை. இவ்வாறு கூறினார்.
13-Jun-2025