மேலும் செய்திகள்
போதை தடுப்பு கருத்தரங்கம்
29-Dec-2024
ஈரோடு : கோபி பி.கே.ஆர்., மகளிர் கலை கல்லுாரியில், கணினி அறிவியல் துறை சார்பாக பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது.சிறப்பு விருந்தினர்களாக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தை சேர்ந்த மாசிலாமணி, சிங்கப்பூரை சேர்ந்த ஓய்வு பேராசிரியர் நரசிம்மன் சுந்தரராஜன் பங்கேற்று பேசினர்.கணிப்பொறி அறிவியல் துறை செயல்பாடு குறித்த நியூஸ் லெட்டர் மற்றும் பன்னாட்டு கருத்தரங்கம் நடப்பதற்குரிய செயல்பாடு வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்குரிய அனைத்து செயல்பாடுகளும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் நடந்தது. நிகழ்வில் கல்லுாரி தாளாளர் வெங்கடாசலம், துணை முதல்வர் தனலட்சுமி, துறை முதன்மையர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
29-Dec-2024