மேலும் செய்திகள்
சண்டிகர் பல்கலை உ.பி.,யில் திறக்க அனுமதி
27-Sep-2024
ஈரோடு : ஈரோடு வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், செயற்கை நுண்ணறிவியல் மற்றும் பாலினம் காலநிலை மாற்றத் தணிப்பு எனும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. மகாராஷ்டிரா மாநிலம் பூனே லவாசா வளாகம் கிரைஸ் நிகர்நிலை பல்கலை மற்றும் ஹைதராபாத் மௌலானா ஆசாத் மத்திய பல்கலை இணைந்து நடத்தியது.ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 90க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரையாளர் கலந்து கொண்டு நேர்முக மற்றும் இணையவழியில் நிகழ்த்துதலை வழங்கினர். முன்னதாக சமூகவியல் துறைத்தலைவர் யாசிர் அஸ்ரப் வரவேற்றார்.வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலர் சந்திரசேகர் தலைமையுரை வழங்கினார். வேளாளர் கல்வி அறக்கட்டளை நிர்வாகி யுவராஜா வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் நல்லசாமி தொடக்கவுரை ஆற்றினார். மலேசியா ஆசியா பசுபிக் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பல்கலை இணை பேராசிரியர் நிரேஷ் பாத்திமா அபுபக்கர், கொழும்பு பல்கலை பேராசிரியர் ஐரிசா லட்சுமணன், ஹைதராபாத் மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலை இணை பேராசிரியர் ஜியாவுதீன், கோவை பாரதியார் பல்கலை சமூக பணியியல் துறைத்தலைவர் சம்பத்குமார், பூனே லவாசா வளாகம் கிரைஸ் நிகர்நிலை பல்கலை தரவகவியல் துறை உதவி பேராசிரியர் ஆசாக் ஹூசைன் கானியே, ஜவகர்லால் நேரு பல்கலை சமூக மருந்தியல் மற்றும் சமூக நலத்துறை பேராசிரியர் சங்கமித்ரா சீல் ஆச்சார்யா, கிரைஸ் நிகர்நிலை பல்கலை கணினியியல் துறை உதவி பேராசிரியர் வந்தனா விஜய் பகத் ஆகியோர் தம் ஆய்வுப் பங்களிப்பை வழங்கினர்.
27-Sep-2024