உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குண்டேரிப்பள்ளம் நீர் தேக்கம் மீன்பிடி குத்தகைக்கு அழைப்பு

குண்டேரிப்பள்ளம் நீர் தேக்கம் மீன்பிடி குத்தகைக்கு அழைப்பு

ஈரோடு, ஈரோடு மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, குண்டேரிப்பள்ளம் நீர் தேக்கத்தின் மீன் பிடி உரிமை, 5 ஆண்டுக்கு குத்தகைக்கு விட, மின்னணு ஒப்பந்தப்புள்ளி ஆணையரால் வரவேற்கப்படுகிறது.ஒப்பந்தப்புள்ளி விபரம், www.tnters.gov.inஎன்ற இணைய தள முகவரியில் பார்வையிட வேண்டும். இந்த இணைய வழி ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், ஒப்பந்தப்புள்ளி படிவம், இதர படிவங்களை இணைய தளத்தில், 19494/F3/2024-3 என்ற ஏல அறிவிப்பு எண்ணை உள்ளீடு செய்து, கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம்.ஒப்பந்தப்புள்ளியை ஆக., 6 மாலை, 5:00க்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி கூடுதல் விபரம் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !