மேலும் செய்திகள்
பிளஸ் 1 சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்
20-May-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபியில் அரசு ஐ.டி.ஐ., இயங்குகிறது. இங்கு எலக்ட்ரீஷியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், ஒயர்மேன், வெல்டர், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், ஏ.சி., மெக்கானிக் மற்றும் பொறியியல் அல்லாத கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், கட்டட பட வரைவாளர் பிரிவுகள் உள்ளன. மாணவர் சேர்க்கை இணைய தளம் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை, 750 ரூபாய், சீருடை, பாட புத்தகங்கள், காலணி, பஸ் பாஸ் இலவசம். 6 முதல், 10ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும். 8ம் வகுப்புடன், 2 ஆண்டு ஐ.டி.ஐ., பயிற்சி, 10ம் வகுப்புடன், 2 ஆண்டு ஐ.டி.ஐ., பயிற்சி முடித்தோருக்கு பள்ளி கல்வித்துறை மூலம் முறையே, 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விபரத்துக்கு அரசு ஐ.டி.ஐ.,யை நேரில் அல்லது, 0424 2275244 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
20-May-2025