உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காய்கறி விதை பெற அழைப்பு

காய்கறி விதை பெற அழைப்பு

ஈரோடு, ஊட்டச்சத்து வேளாண்மை தொகுப்பு திட்டத்தில், புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி, பயறு வகைகளை இல்லம் தோறும் வளர்ப்பதை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பயறு வகை அடங்கிய விதை தொகுப்பு (மரத்துவரை-5 கிராம், காராமணி - 10 கிராம், அவரை - 10 கிராம்), காய்கறி விதை தொகுப்பு (தக்காளி, கத்தரி, வெண்டை, கொத்தவரை, கீரை வகைகள்) மற்றும் பழ செடிகள் தொகுப்பு (கொய்யா, எலுமிச்சை, பப்பாளி) தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு, 100 சதவீதம் மானியத்தில் வழங்கி, இன்று திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் இத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. https://tnhorticulture.tn.gov.in/kit/ என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை