உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெல்லம் தயாரிக்கும் பணிமழை - காற்றால் நிறுத்தம்

வெல்லம் தயாரிக்கும் பணிமழை - காற்றால் நிறுத்தம்

பவானி:அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக, பரவலாக மழை பெய்தது. இதனால் சிங்கம்பேட்டை, ஆனந்தம்பாளையம் பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணி பாதித்துள்ளது.இதுகுறித்து ஆனந்தம்பாளையம் பகுதி வெல்ல தயாரிப்பாளர்கள் கூறியதாவது: கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அடுப்புகள் எரிக்க பயன்படும் கரும்பு சக்கை நனைந்து போவதாலும், சக்கையை காய வைக்கும் களமும் ஈரமாக உள்ளதாலும், வெல்லம் தயாரிக்கும் பணி தடைபட்டு வருகிறது. பகலில் வெயில் கரும்பு சக்கைகளை காயவைத்து தயார் செய்தாலும், இரவில் மழை பெய்வதால், வெல்லம் காய்ச்சப்படுவது தடைபடுகிறது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி