மேலும் செய்திகள்
திண்டுக்கல் மார்க்கெட்டில் விலை உயர்ந்த பூக்கள்
24-Oct-2025
புன்செய்புளியம்பட்டி: அக். 31-: ஐப்பசி மாத வளர்பிறை முகூர்த்த சீசனால், மல்லிகைப்பூ விலை உயர்ந்துள்ளது. ஈ ரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டுக்கு, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பூக்கள் எடுத்து வரப்படுகின்றன. குறைந்த விலைக்கு பூக்கள் விற்ற நிலையில், ஐப்பசி மாத வளர்பிறை முகூர்த்த சீசனால், நேற்று விலை அதிகரித்தது . அதாவது சில நாட்களுக்கு முன் கிலோ, 1,000 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ, 850 ரூபாய் உயர்ந்து, 1,850 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதே போல, கிலோ, 400 ரூபாய்க்கு விற்ற முல்லைப்பூ, 700 ரூபாயாக உயர்ந்தது. சம்பங்கி 60 ரூபாய், அரளி 260 ரூபாய், கனகாம்பரம் 800 ரூ பாய், செண்டுமல்லிப்பூ 80 ரூபாய்க்கும் விற்றது. 'தங்கம் போல மல்லிகைப்பூ விலை உயர்ந்துள்ளது' என, பூ வியாபாரிகளும், வாங்க வந்தவர்களும் கூறினர்.
24-Oct-2025