உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜெ., பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜெ., பிறந்தநாள் கொண்டாட்டம்

ஈரோடு: மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின், 78வது பிறந்தநாளை, அ.தி.மு.க.,வினர் நேற்று கொண்டாடினர். ஈரோடு ப.செ., பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு, முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, சிவசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.* கோபி கச்சேரிமேட்டில் ஜெ., போட்டோவுக்கு, கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ் தலைமையிலான கட்சியினர் மரியாதை செலுத்தினர். * பவானியில் அந்தியூர் பிரிவில், ஜெ., போட்டோவுக்கு, எம்.எல்.ஏ., கருப்பணன் தலைமையிலான கட்சியினர் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினர். * பவானி, காடையாம்பட்டியில், அ.ம.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் மதிவாணன் தலைமையில், ஜெ., உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை