உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா

அரங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா

ஈரோடு, டிச. 12-ஈரோடு, கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் நடந்த கைசிக ஏகாதசி விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆண்டுதோறும், கார்த்திகை மாதத்தில் கைசிக ஏகாதசியாக, வைணவ பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சுவாமிக்கு, 365 வஸ்திரங்கள் சமர்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஈரோடு கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், நேற்று கைசிக ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்துாரி அரங்கநாதருக்கு அபிஷேகமும், கைசிக ஏகாதசி உற்சவமும் நடந்தது.இதையொட்டி, வேத மந்திரங்கள் முழங்க, 365 வஸ்திரங்கள் சுவாமிக்கு சமர்பிக்கப்பட்டன. கைசிக மகாத்மிய பாராயணம் பிரபந்த கோஷ்டியினரால் வாசிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை