உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கண்ணபுரம் மாட்டுச்சந்தைவரும் 27ம் தேதி துவக்கம்

கண்ணபுரம் மாட்டுச்சந்தைவரும் 27ம் தேதி துவக்கம்

காங்கேயம்:காங்கேயத்தை அடுத்த ஓலப்பபாளையம் அருகே கண்ணபுரத்தில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விக்ரம சோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை ஒட்டி மாட்டுச்சந்தை நடப்பது வழக்கம். நடப்பாண்டில் வரும், 27ல் தொடங்கி, 10 நாட்கள் நடக்கவுள்ளது.பொள்ளாச்சி, தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காங்கேயம் இன மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மாடுகளை வாங்க பல்வேறு மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் வருவர். நடப்பாண்டு சந்தைக்கு, 20 ஆயிரத்தும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு வரும் என கால்நடை வளர்ப்போர் எதிர்பார்க்கின்றனர். 25 முதல் கோடைகால விளையாட்டு பயிற்சிஈரோடு:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், ஈரோடு மாவட்ட கோடைகால பயிற்சி முகாம், ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும், 25ம்தேதி முதல், மே, 15 வரை நடக்கவுள்ளது. தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி வழங்கப்படும். பள்ளி, கல்லுாரி மாணவர் மற்றும் மாணவரல்லாத, 18 வயதுக்கு கீழ் உள்ளோர் பங்கேற்கலாம். ஆதார் காடு நகலை சமர்ப்பிக்க வேண்டும்.பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர் வரும், 25ம் தேதி காலை, 6:00 மணி முதல், ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் பெயரை பதிவு செய்யலாம். கூடுதல் விபரத்துக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை, 74017 03490 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ