உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கராத்தே பயிற்சியாளர்கள் எஸ்.பி., ஆபீஸில் மனு

கராத்தே பயிற்சியாளர்கள் எஸ்.பி., ஆபீஸில் மனு

கராத்தே பயிற்சியாளர்கள் எஸ்.பி., ஆபீஸில் மனுஈரோடு, டிச. 25-ஈரோடு மாவட்ட டிரெடிஷனல் அண்ட் ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சார்பில் செயலாளர் சக்திவேல், ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சில மோசடி பேர்வழிகள், முறையாக கராத்தே பயிற்சி பெறாதவர்களுக்கும் பிளாக் பெல்ட்டை காசுக்காக விற்பனை செய்து வருகின்றனர்.கராத்தே தெரியாத சிலர், கராத்தே கற்று கொடுத்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. கராத்தே போட்டி, கற்று கொடுப்பதாக கூறும் நபர்களின் உண்மை தன்மையை கண்டறிந்து மாணவ, மாணவிகள், இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை