கருணாநிதி சிலை உடைப்பு
ஈரோடு: கருணாநிதி சிலைகள், தி.மு.க., அலுவலகங்கள், நுாலக கண்ணாடி உடைப்பு குறித்து அந்தந்த பகுதி தி.மு.க., நிர்வாகிகள், போலீசில் புகார் செய்தனர். ஈரோடு எஸ்.பி., கிரண் ஸ்ருதி, திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றதால், திருப்பூர் எஸ்.பி., சிருஷ்டி சிங், சம்பவ இடங்களை ஆய்வு செய்தார். இதில் ஈடுபட்ட ஹரி விக்னேஷ், தீவிர த.வெ.க., ஆதரவாளராக செயல்பட்டதும், அவரது வீட்டில் முதல்வர் விஜய் படம், த.வெ.க., கட்சி அடையாள போஸ்டர், முகநுாலில் த.வெ.க., குறித்தும், முதல்வரை பாராட்டியும் கருத்து வெளியிட்டதும், போட்டோக்களை பகிர்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் த.வெ.க.,வில் அவர் தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். ஹரி விக்னேஷ் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.