சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையால் டயாலிசிஸை நிரந்தரமாக நிறுத்தலாம்
ஈரோடு, அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணன் (சிறுநீரக சிறப்பு மருத்துவர் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்) கூறியதாவது: சிறுநீரகங்கள் வேலை செய்யும் திறனை அளவிடும் முக்கியமான அளவீடு தான் குளோமெருலார் பில்ட்ரேஷன் ரேட் (GFR). இது ஒரு நிமிடத்தில் சிறுநீரகங்கள் எத்தனை மில்லி லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கும் என்பதை காட்டுகிறது. ரத்தத்தில் கிரியாட்டின் அளவை பரிசோதித்து, அதன் அடிப்படையில் மதிப்பு கணக்கிடப்படுகிறது. ஒரு நபரின் கிரியாட்டின் அளவு 1 mg/dL-க்கு குறைவாக இருந்தால், சிறுநீரகங்கள் நன்றாக செயல்படுகின்றன என்று கருதலாம். ஜி.எப்.ஆரி.,ன் மதிப்பு 15 mL/min-க்கு கீழ் இருந்தால், சிறுநீர செயல்பாடு குறைந்த நிலையில் இருப்பதாகும். இதனால் டயாலிசிஸ் அவசியமாகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம், டயாலிசிஸை நிரந்தரமாக நிறுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது. உணவு பழக்க வழக்கம், சர்க்கரை, பி.பி., கட்டுப்பாடு ஜி.எப்.ஆரை., பாதுகாக்க உதவும். அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் இதுவரை, 100க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.