கோ-55 ரக நெல் சாகுபடி விவசாயிகளுக்கு யோசனை
கோ-55 ரக நெல் சாகுபடிவிவசாயிகளுக்கு யோசனைஈரோடு, நவ. 3-நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நெல் விதை கோ-55 ரகம், அறுவடை பருவத்தில் உள்ளது. இந்த கோ-55 நெல், குறுகிய வயதுடைய மிகமிக சன்ன ரகமாகும். அதிக துார் கிளைப்பு, உயர் விளைச்சல் தரும் தன்மையுடையது. ஹெக்டேருக்கு, 6,057 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. அதிக அரவை காணும் திறன் மற்றும் முழு அரிசி காணும் பண்புகளை கொண்டது. அமைலோஸ் என்ற மாவு பொருள் நடுத்தர அளவில் இருப்பதால், சமைப்பதற்கு மிகவும் சிறந்தது. கார், குறுவை, சொர்ணவாரி, நவரை பட்டங்களில் சாகுபடி செய்ய ஏற்றது. ஈரோடு மாவட்ட விவசாயிகள், கோ-55 ரக நெல் ரகத்தை சாகுபடி செய்து பயனடைய, ஈரோடு விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குனர் சத்தியராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.