உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளால் சிக்கல் கிறுகிறுக்க வைக்கும் கிருஷ்ணம்பாளையம் ரோடு

அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளால் சிக்கல் கிறுகிறுக்க வைக்கும் கிருஷ்ணம்பாளையம் ரோடு

ஈரோடு :ஈரோடு மாநகராட்சி, 26வது வார்டு கருங்கல்பாளையம் அருகில் கிருஷ்ணம்பாளையம் ரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்நிலையில் காவேரி ரோட்டுக்கு திரும்பும் இடத்துக்கு சற்று முன்பாக, சாலை நடுவில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்தது. இதனால் புது மேன்ஹோல் அமைத்து, பாதுகாப்புக்காக சுற்றிலும் வைத்த பேரிகார்டுகளை, ஒரு மாதமாகியும் அகற்றவில்லை. இந்நிலையில் அதனருகில் உள்ள வேறொரு மேன்ஹோல் பகுதி முற்றிலும் சேதமாகி பள்ளமாக மாறியுள்ளது. இந்த பள்ளத்தை சரி செய்யாமல், சுற்றிலும் பேரிகார்டு மட்டும் வைத்துள்ளனர். சிறிது இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு இடத்தில் போரிகார்டு சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் பயணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக எதிர் திசையில் வாகனம் வந்தால், மறுதிசையில் அரை கிலோ மீட்டருக்கு வாகனம் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. இனியும் தாமதப்படுத்தாமல் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ