கும்பாபிஷேக நிறைவு விழா
சென்னிமலை, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், 2014ல் கும்பாபிஷேகம் நடந்ததது. இந்நிலையில், ௧௧ம் ஆண்டு நிறைவு விழா கோவிலில் நேற்று நடந்தது. இதையொட்டி காலை, 10:௦௦ மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்பு யாக வேள்வி, பூஜை செய்து, 16 வகை திரவிய அபிஷேகம் மூலவர், உற்சவருக்கு நடந்தது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.