மாகாளியம்மன் கோவிலில் 5ம் தேதி குண்டம் விழா
ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி மாகாளியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் மற்றும் பொங்கல் விழா கடந்த, 25ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அம்மன் முத்து பல்லக்கு வீதியுலா நேற்று நடந்தது. நாளை காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வருதல், இரவு குண்டம் பற்ற வைத்தல் நடக்கிறது. 5ம் தேதி காலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, பொங்கல் வைபவம் நடக்கிறது.