மேலும் செய்திகள்
சரக்கு வாகனம் மோதி ஒருவர் பலி
13-Sep-2026
புன்செய்புளியம்பட்டி:திருப்பூரை சேர்ந்தவர் பழனிச்சாமி, 47, பனியன் நிறுவன தொழிலாளி. அவிநாசியில் இருந்து புன்செய்புளியம்பட்டி நோக்கி டியோ ஸ்கூட்டரில் நேற்று மதியம் சென்றார். கோவில்புதுார் பாலம் அருகே வளைவில் திரும்பியபோது, எதிரே திருப்பூர் நோக்கி புகையிலை பாரம் ஏற்றி சென்ற சரக்கு வாகனம் மோதியது. டூவீலரில் இருந்து துாக்கி வீசப்பட்ட பழனிச்சாமி தலையில் பலத்த காயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். புளியம்பட்டி போலீசார் சரக்கு வாகன டிரைவர் ராஜமாணிக்கத்தின் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
13-Sep-2026