வக்கீல் கொலை; மேலும் இருவர் கைது
தாராபுரம், வழக்கறிஞர் கொலை வழக்கில், இருவரை, போலீசார் கைது செய்தனர். தாராபுரத்தில் கடந்த ஜூலை 28ல், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம், 41, கூலிப்படை கும்பலால், பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாராபுரம் தேன்மலர் மெட்ரிக் பள்ளி தாளாளர் தண்டபாணி, அவரது மகனும் பள்ளி சேர்மேனுமாகிய வக்கீல் கார்த்திகேயன் உள்பட, 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஒன்பது பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் தண்டபாணி சம்மந்தியான சேலத்தை சேர்ந்த ஹேமா, 43, அவரது மகன் முகில், 22, ஆகியோரை, தாராபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.