உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

ஈரோடு, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வக்கீல் முருகானந்தம் கடந்த, 28ல் கூலி படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இதே போல் தாம்பரத்தை சேர்ந்த வக்கீல் ரகுராமன், சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்செயல்களை கண்டித்தும், மத்திய-மாநில அரசுகள் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற கோரி, பார் அசோசியேஷன் தலைவர் சரத் சந்தர் தலைமையில், ஈரோட்டில் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.* இதேபோல், பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், 80க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து பணிகளை புறக்கணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !