உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலை கிராமத்தில் சிறுத்தை மீண்டும் அட்டகாசம் மாடுகளை கடித்து கொன்றதால் அச்சம்

மலை கிராமத்தில் சிறுத்தை மீண்டும் அட்டகாசம் மாடுகளை கடித்து கொன்றதால் அச்சம்

சத்தியமங்கலம்:ஆசனுார் மலை கிராமத்தில், அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்கக்கோரி வனத்துறை அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.தாளவாடி மலையில் உள்ள ஆசனுார் மலை கிராமத்தில், சிறுத்தை நடமாட்டம் சமீபமாக அதிகரித்து விட்டது. கடந்த வாரம் பழங்குடி இளைஞரை சிறுத்தை தாக்கி கொன்றது. மீதி உடலை சாப்பிட அதே இடத்துக்கு மறுநாள் வந்தபோது அங்கிருந்த இரண்டு நாய்களை வேட்டையாடி சென்றது. தொடர்ந்து கன்றுக்குட்டி, எருமையை தாக்கி கொன்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒங்கல்வாடியை சேர்ந்த சிவனேகரன், மாதேஷ், மற்றும் பழைய ஆசனுார், ராஜன், வீரன், பங்களா தொட்டி சரசா ஆகியோருக்கு சொந்தமான மாடுகளை கடித்து கொன்றது. சிறுத்தையின் தொடர் வேட்டையால், மலை கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே ஆசனுார் வனத்துறையினர் சிறுத்தையை டிரோன் கேமரா மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பதுடன், இரவு ரோந்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிறுத்தையால் தாக்கி பலியான ஒரு கன்றுக்குட்டி உடலுடன், ஆசனுார் வனச்சரக அலுவலகம் முன், 50க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று மதியம் திரண்டனர்.ஆட்கொல்லி சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தி, வனத்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் சமாதானத்தை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை