உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நடப்போம்-நலம் பெறுவோம் நிகழ்ச்சி

நடப்போம்-நலம் பெறுவோம் நிகழ்ச்சி

ஈரோடு: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சித்தோடு வட்-டாரம் சார்பில், 'நடப்போம்-நலம் பெறுவோம்' நிகழ்ச்சி கனிரா-வுத்தர் குளம் பகுதியில் நேற்று நடந்தது. இதில் டாக்டர்கள், அனைத்து சுகாதார பணியாளர், கல்லுாரிகளை சேர்ந்த, 300 நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்டம் சார்பில் மாவட்ட துணை தலைவர் சுந்தர ராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட துணை அமைச்சர் ஞான சேகர் கலந்து கொண்டு மஞ்சள் பை திட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் மஞ்சள் பையை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !