மேலும் செய்திகள்
ரூ.970.74 கோடிக்கு ஓணம் மது விற்பனை
09-Sep-2025
காங்கேயம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, வள்ளலார் தினம், திருவள்ளுவர் தினம் உள்ளிட்ட சில தினங்களில், டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த தினங்களில் மது விற்கவும் தடை விதிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகங்களும் கடும் எச்சரிக்கை விடுக்கிறது. அதாவது இந்த நாட்களில் மது விற்பது சட்டப்படி தவறு; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுதான் அது. ஆனால் நிஜத்தில் இந்த நாட்களில்தான், முறைகேடாகவும், சந்துக்கடைகளிலும் மது விற்பனை சக்கைப்போடு போடுகிறது. விலை டபுளாக இருந்தாலும் குடிமகன்கள் கவலைப்படுவதில்லை. இந்த வகையில் காந்தி ஜெயந்தி தினமான நேற்று, காங்கேயத்தில் பல இடங்களில் முறைகேடு மது விற்பனை கொடி கட்டி பறந்தது. குறிப்பாக காங்கேயத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள சந்தை வளாகத்தில், எவ்வித தயக்கமும் இன்றி மது விற்பனை களை கட்டியது.
09-Sep-2025