அரசு பள்ளிகளில் இலக்கிய போட்டி
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, பள்ளி அளவில் இலக்கிய போட்டி தமிழ், ஆங்கிலத்தில் இன்று முதல் 16க்குள் இலக்கிய மன்றம் வாயிலாக நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலக்கியம் சார்ந்து கட்டுரை எழுதுதல், கதை சொல்லுதல், பேச்சு, கவிதை எழுதுதல் போட்டி நடத்த வேண்டும்.இதேபோல் வினாடி வினா போட்டி, வினாடி வினா மன்றம் சார்பில் நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு தொடர்-பாக நவ.,4 முதல் ௬ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தலைமை ஆசி-ரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.